Header

புதன், 26 டிசம்பர், 2012

Youtube Downloader


Youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நிறைய சாப்ட்வேர்கள் இருந்தாலும் இது புதியதாக உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளீக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Tools  கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Video Link என்பதில் உங்கள் யூ டியூப் வீடியோ யூஆர்எல் முகவரியை போஸ்ட் செய்யவும்.
பின்னர் இதில் உள்ள டவுண்லோடு என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் Audio Mp3,Generic Video,DVD,Apple,Mobile Phone என வரும் பார்மெட்டுக்களில் எது தேவையோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை FaceBook.Twitter,Google+ என்பதன் மூலம் மற்றவர்களுக்கும் தெரியபடுத்தலாம்.
இதன் மூலம் நாம் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ நாம் விரும்பிய பார்மெட்டில் விரும்பிய இடத்தில உள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருஙகள்.கருத்துக்களை கூறுங்கள்.

லேசர் பிரிண்டர் வாங்கும்போது...


லேசர் பிரிண்டர் வாங்குபவர்கள் விற்பனைச் சந்தையில் பல வகையான லேசர்
பிரிண்டர்களைப் பார்த்து திகைக்கின்றனர். விற்பனையாளர்கள் கூறும் பலவிதமான தொழில் நுட்ப சங்கதிகளைப் புரியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் தங்களின் தேவைக்கு அதிகப்படியான திறன் கொண்டதை வாங்குகின்றனர். அல்லது தேவைகளை நிறைவேற்ற முடியாத ஒரு லேசர் பிரிண்டரை வாங்குகின்றனர். இந்த கட்டுரையில் எப்படிப்பட்ட லேசர் பிரிண்டர் உங்களுக்குத் தேவை என்பதைச் சுட்டிக் காட்டும் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

யாருக்கு லேசர் பிரின்டர் தேவை? தினமும் ஏராளமான பக்கங்களை அச்சடிப்பவர்களுக்கு, வேகமாக அச்சடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, படங்களை துல்லியமாக, சீராக அச்சடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக லேசர் பிரின்டர் தேவை.

  1. பிரின்டரில் Resolution என்பது முக்கியம். இதை Dots per inch (dpi) என்ற அலகில் குறிப்பிடுவார்கள். இந்த அளவு கூடுதலாக இருப்பது நல்லது. 300 dpi ரெசல்யூசன் கொண்ட லேசர் பிரின்டர்கள் சாதாரணமாகப் போதுமானது. சிறிது விலை அதிகமானாலும் பரவாயில்லை, அச்சின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 600 dpi ரெசல்யூசனுக்குச் செல்லலாம். 1200 dpi அல்லது அதற்கு மேல் ரெசல்யூசன் கொண்ட பிரின்டர்களின் அச்சடிப்புகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம்.
  2. பிரின்டரின் Interface அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். பேரலல் போர்ட் அல்லது யுஎஸ்பி (USP) போர்ட் அல்லது இந்த இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற லேசர் பிரின்டர்கள் விற்பனைக்கு உள்ளன. உங்களிடம் பழைய கம்ப்யூட்டர் இருந்தால் அதில் யுஎஸ்பி போர்ட் இருக்காது. அப்படியானால் பேரலல் போர்ட் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். கம்ப்யூட்டரில் யுஎஸ்பி போர்ட் உள்ளவர்கள் யுஎஸ்பி இன்டர்பேஸ் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். காரணம், இதன் வேகம் அதிகம்.
  3. எவ்வளவு காகிதங்களை பிரின்டரின் டிரேயில் வைக்க முடியும் என்பதைக் கவனியுங்கள். விலை குறைந்த சில பிரின்டர்களில் ஏறத்தாழ 100 காகிதங்களை மட்டுமே டிரேயில் வைக்க முடியும். விலை கூடிய ஒரு சில பிரின்டர்களில் ஏறத்தாழ 600 காகிதங்களை வைக்க முடியும். நிறைய காகிதங்களைப் பிரின்டரில் வைப்பதாக இருந்தால், அச்சடிக்கும் கட்டளையை கொடுத்து விட்டு வேறு வேலைகளை நீங்கள் பார்க்கலாம். இல்லையெனில் பிரின்டரின் பக்கத்திலேயே நின்று கொண்டு காகிதங்கள் தீர்ந்து போனால் புது காகிதங்களை அடுக்க வேண்டியிருக்கும்.
  4. யானையைக் கொடுத்து விட்டு அங்குசத்தை கொடுக்காமல் விட்டால் என்னவாகும்? அதுபோல் பிரின்டரைக் கொடுத்து விட்டு அதற்கான இன்டர்பேஸ் கேபிளைத் தராவிட்டால் என்னவாகும்? பல நிறுவனங்கள் இந்த கேபிள்கள் இல்லாமல் லேசர் பிரின்டர்களை விற்கின்றன. தனியாக இந்த கேபிள்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். எனவே பிரின்டருடன் இன்டர் பேஸ் கேபிளையும் சேர்த்து தருகிறவர்களிடமே வாங்குங்கள்.
  5. வாங்கப் போகும் லேசர் பிரிண்டருக்கான டோனரின் விலை குறைவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். டோனர் தீர்ந்தவுடன் உடனடியாக கிடைக்கிறதா என்பதையும் விசாரியுங்கள்.
  6. டோனரின் விலையைப் பார்ப்பதை விட மற்றொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அந்த அம்சத்தை பலர் கண்டு கொள்ளுவதே இல்லை. ஆனால் அதுதான் முக்கியம். ஒரு பக்கத்தை அச்சடிக்க எந்த பிரின்டரில் செலவு குறைவாக வருகிறதோ அதுதான் சிறந்த பிரின்டர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
  7. LCD display உள்ள லேசர் பிரின்டராக இருந்தால் நல்லது. என்ன நிலையில் இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்களை LCD மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
  8. Led விளக்குகள் நிறைய இருந்தால் நல்லது. பொதுவாக Power, Paper jam, Toner low, load Paper, Paper out, Ready, Error, Manual, Data, Alarm போன்ற பல விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க சிறு விளக்குகள் இருந்தால் நல்லது. எல்சிடி டிஸ்பிளே இல்லாத லேசர் பிரின்டர்களில் இந்த விளக்குகள்தான் உங்களுக்கு உதவும்.
  9. Input Buffer எனப்படுகிற நினைவகம் அதிகம் இருக்க வேண்டும். 12 MB buffer உள்ள பிரின்டரின் விலை சற்று அதிகமாக இருக்கும். குறைந்தது 8 எம்பி பபர் உள்ள லேசர் பிரின்டரை வாங்குவது நல்லது.
  10. காகிதங்களை வைப்பதற்கான டிரேக்கள் (Tray) எத்தனை தரப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். எல்லா பிரின்டர்களிலும் கண்டிப்பாக ஒரு டிரே இருக்கும். இன்னொரு டிரே கூடுதலாக இருப்பது நல்லது.
  11. Manual மற்றும் Quick Start Guide ஆகிய உதவிப் புத்தகங்களை லேசர் பிரின்டருடன் தருகிறார்களா என்று பாருங்கள். சிக்கலான நேரங்களில் இருந்த புத்தகங்கள் கை கொடுக்கும்.
  12. எடையும், அளவும் எவ்வளவு என்று பாருங்கள். இடம் குறைந்த அலுவலகம் அல்லது சிறிய மேஜையில் பிரின்டரை வைக்க விரும்புபவர்கள் நீள, அகலம் குறைந்த பிரின்டர்களை வாங்குவது நல்லது.
  13. உத்தரவாத காலம் அதிகமாக இருக்க வேண்டும். 3 வருடங்கள் உத்தரவாத காலம் கொண்ட பிரின்டர்களாக இருப்பது நல்லது.
  14. உங்கள் ஊரில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் உள்ளதா என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் ஊருக்கு அருகில் எங்கு சர்வீஸ் சென்டர் உள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.

செவ்வாய், 25 டிசம்பர், 2012

Windows 7 இன் Problem Steps Recorder

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்த கூடிய இயங்குதளம் (OS) Windows இயங்குதளம் தான். அந்த நிறுவனமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான Windows 8-இன் பதிப்பை இப்பொழுது தான் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் Windows 7 பெரிய வரவேற்ப்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது.இந்த Windows 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. அதில் உள்ள ஒரு சிறப்பான வசதி இந்த Problem Steps Recorder ஆகும்.


இதன் மூலம் நாம் நம் கணினியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கம்ப்யூட்டர் சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ளலாம்.

இந்த மென்பொருள் ஒவ்வொரு திரையையும் பதித்து ( SCREEN SHOT ) வைக்கிறது அதுமட்டுமல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யையும் பதிந்து வைக்கிறது. இதன் மூலம் நீங்கள் எங்கே என்ன செய்திர்கள் என்பதை மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.

இதனை திறப்பதற்கு :

START மெனுவில் கிளிக் செய்து அதில் RUN-ஐ அழுத்துங்கள் அதில் PSR என தட்டச்சு  செய்யுங்கள் ( அல்லது ) START மெனுவில் உள்ள SEARCH என்பதில் PSR என தட்டாசு செய்யுங்கள்.





இதனை பயன்படுத்த : 

முதலில்அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். 

பின்னர் வரும் விண்டோவில் START RECORD என்ற buttonனை அழுத்துங்கள். 

பின்னர் எந்த மென்பொருள் செயல்படவில்லையோ அதனை திறந்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். 

நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட்டியினை அழுத்தும்போதும் இந்த மென்பொருள் ஸ்க்ரீன் SNAP SHOT எடுத்து வைக்கும். 

முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள். 

பின்னர் அது கோப்பை ( FILE ) எங்கு சேமிக்க வேண்டுமென்று கேட்கும் அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்துங்கள். 


அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பிகொள்ளுங்கள். இந்த மென்பொருள் உங்கள் ஸ்க்ரீன்கலை பதிந்து HTML கோப்பாக மாற்றிவைக்கும் அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப் பட்டிருக்கும்.


 
நான் இதை Practical Steps Record பண்ணுவதற்கும் பயன்படுத்துவதுண்டு.

திங்கள், 24 டிசம்பர், 2012

Facebook இல் உள்ள உங்கள் friends மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க

Facebookகில் நாம் நிறைய நண்பர்களுடன் நண்பர்களாக இருப்போம். அதில் ஒரு சிலர் நமக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள் இன்னும் பலர் தெரியாதவர்களாக இருப்பர்கள். நமக்கு மொத்தம் எத்தனை நண்பர்கள் உண்டு, அதில் எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள், பேஸ்புக்கில் உண்டு என்பதை பொதுவாக அனைவருக்கும் காட்டும் இந்த பேஸ்புக்.இதை எப்படி மறைப்பது!!


  1. உங்களுடைய Timeline இற்கு செல்லவும்.
  2. Friends இனை click பண்ணவும்.
  3. Edit button ஐ ச்லிச்க் பண்ணவும்.
  4. ”Who can see your friend list on your timeline?” ஐ "only me" இற்கு மாற்றவும்.


வியாழன், 1 நவம்பர், 2012

தமிழில் programming கற்றுக்கொள்ள ஒரு வலைப்பூ

தமிழில் programming ஆ? இந்த தகவல் கற்கண்டு போல இனிக்கிறதா? ஆம். வலைப்பூவின் பெயரும் அதுதான்.

கற்கண்டு

"வலைப் பூ (Blog) என்றால் என்ன? எவ்வாறு பதிவது?" - தமிழில் அறிய

அதிகமான இளம் வயதினருக்கு blog இல் ஆர்வம் இருந்தாலும், அதை எவ்வாறு உருவாக்குவது என்பதை தெரியாமல் உள்ளனர். அவர்களுக்கு இந்த வலைப்பூவில், தமிழில் படிபடியாக விளக்கி உள்ளார்கள். அந்த link கள் ஒழுங்காக கீழே தரப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.


வலைப்பூ என்றால் என்ன?


வலைப் பூவில் உங்களுக்கான வலைப்பூ தொடங்குவது எப்படி?






கேட்ஜெட் (GADGETS) மற்றும் பிளாக்கர் லேஅவுட் (LAYOUT) பயன்படுத்துவது எப்படி?

Facebook Photo களுக்கு சுலபமாக விதவிதமான Effects கொடுக்க


பிரபல சமூக தளமான facebookகில் பலவிதமான photoகளை நாம் Upload செய்து மற்றவர்களுடன் பகிர்கிறோம். அந்த photoகளுக்கு எப்படி சுலபமாக Fun Effects கொடுப்பது என பார்க்கலாம். பொதுவாக photoகளுக்கு Fun Effects கொடுக்க நிறைய இணையதளங்கள் உள்ளன. ஆனால் அந்த தளங்களில் நேரடியாக facebookகில் உள்ள photoகளுக்கு Effects கொடுக்க முடியாது. மாறாக Fun Effects கொடுக்க முதலில் facebookகில் இருந்து photoவை download செய்து அந்த தளத்தில் upload செய்து disign பண்ணி முடித்தவுடன் மறுபடியும் அந்த தளத்தில் இருந்து  photoவை download செய்து பிறகு facebookகில் upload செய்ய வேண்டும். நேரமும் அதிகமாக செலவாகிறது. ஆனால் இவ்வளவு வேலைகளையும் குறைத்து சுலபமாக photoகளுக்கு விதவிதமான Fun Effects கொடுப்பது எப்படி என இங்கு பார்ப்போம்.


முதலில் கீழே இந்த Mess My Photo linkகில் click செய்து இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளம் திறந்தவுடன் அதில் உள்ள FB Select என்பதை கிளிக் செய்யவும்.
  • முதல் தடவை என்பதால் facebook permission கேட்கும். அதற்கு முதலில் வரும் windowவில் Install என்றும் அடுத்து வரும் windowவில் Allow என்பதையும் கொடுக்கவும்.
  • அடுத்த windowவில் உங்களின் facebook கணக்கில் உள்ள photoகள் வரும். அதில் effect கொடுக்க விரும்பும் photoவை தேர்வு செய்து கொள்ளவும்.   
  •   நீங்கள் தேர்வு செய்த photoவில் உங்களுக்கு விருப்பமான effect கொடுத்து அழகாக மாற்றி கொள்ளவும்.



  • இதில் சுமார் 10 விதமான effect உள்ளது. உங்களுக்கு விரும்பிய effect கொடுத்து மாற்றியவுடன் Apply கொடுத்து FB SAVE என்ற லிங்கை அழுத்தியவுடன் இந்த புதிய photo உங்கள் facebook கணக்கில் சேமிக்கப்படும்

எளிமையாக ஆங்கிலத்தில் programming கற்றுக் கொள்ள வேண்டுமா?


இவை தவிர, Programming செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, Programming பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக, இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது. இதன் பெயர் கோட் அகடமி (Code Academy). Programme எழுதுவதனை coding எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் Account திறக்கும் முன்னர், Programming எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது. நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம், அப்படியேகொஞ்சம் கொஞ்சமாகநம்மை Programming என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது. அதன் பின்னரே, நம்மை தளத்தில் பதியச் சொல்லி கேட்கிறது. இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன. புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல் பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் Programming கற்றுக் கொள்ளலாம்.

புதன், 31 அக்டோபர், 2012

SOFTWARE உதவி இல்லாமல் YOU TUBE வீடியோகளை DOWNLOAD செய்வது எப்படி?

You Tube தளம் அதிகமான வீடியோ களை கொண்டுள்ளது. ஆனால் நாம் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது சில நேரங்களில் You Tube வீடியோகளை Download  செய்ய நினைப்போம். ஆனால் அதை Download செய்ய தனியாக You Tube Downloader or Download Manager Install செய்ய வேண்டும்.

இதனால் வீடியோகளை டவுன்லோட் செய்யாமல் கூட விட்டு விடுவோம்.
அதற்கு ஒரு எளிமையாக Software உதவி இல்லாமல் You Tube வீடியோகளை Download செய்வது எப்படி என்று பார்போம்.

இந்த முறை மிகவும் பழமையான முறை என்றாலும் நிறைய பேருக்கு இந்த வசதி இருப்பது தெரியவில்லை.

Software உதவி இல்லாமல் You Tube வீடியோகளை Download செய்வது எப்படி? 

Step 1: முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோ உள்ள You Tube பக்கத்திற்கு செல்லுங்கள்.



Step 2: இப்பொழுது அட்ரஸ் பார்ரில் உள்ள url லை copy செய்து கொள்ளுங்கள். அதை new Window ஓபன் செய்து அதில் அட்ரஸ் பார்ரில்  paste செய்யுங்கள்.

இப்படி இருக்கும் url : www.youtube.com/watch?v=qMASZFBHm18

Step 3: இதில் youtube என்பதற்கு முன்னால் ss என்று சேர்த்து என்ட்டர் கொடுக்கவும் இப்பொழுது வரும் பக்கத்தில் நீங்கள் வீடியோ வை டவுன்லோட் செய்ய முடியும். உங்களுக்கு எந்த format ல் வீடியோ வேண்டுமோ அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.



www.ssyoutube.com/watch?v=qMASZFBHm18





எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 21 நாவல்கள்




எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 21 நாவல்களை download செய்ய கீழே உள்ள download link கில் click  செய்யவும்.

DownLoad Links :

01. கொலைகார கம்ப்யூட்டர் 
02.இது காதல் காலம்
 
03.அழகிய தீயே
 
04. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
 
05.குறிஞ்சி பூக்கள் எங்கும் பூக்கும்
 
06.இனி இல்லை இந்து
 
07.கடைசி சொட்டு ரத்தம்
 
08. அது ஒரு நிலாக்காலம்
 
09.மற்றவை நள்ளிரவு 1.5 க்கு
 
10. வெல்வெட் கில்லர்
 
11.டிசம்பர் பௌர்ணமி
 
12.கொலையாவது செய் கண்ணே
 
13.கொலுசு சத்தம்
 
14.சிவப்பு ரோஜா
 
15. இதுதான் சொர்க்கம்
 
16.நீ இன்றி நான் ஏது
 
17. இனி மின்மினி
 
18. கிலி கிளி கிழி
 
19. காவ்யாவின் கருப்பு தினங்கள்
 
20.அவள் ஒரு ஆச்சர்யகுறி
 
21.நைலான் கனவுகள்


இந்த நாவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. இதனை பதிவேற்றிய அனைத்து நண்பர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றி...

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்களும்

இந்து சமயத்தின் வளர்ச்சியிலும் மனித சமுதாயத்தின் நலத்திலும் கருத்து மிகச் செலுத்தி, தம் வாழ்க்கையில் பெற்ற அனுபவக் கீற்றுகளுக்கு உருக்கொடுத்து தத்துவத்தையும் ஞானத்தையும் சேர்த்து, கனியமுதம் போன்ற கட்டுரைகள் வடிவில், ‘அர்த்தமுள்ள இந்து மத’ மாகத் தந்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.


அர்த்தமுள்ள இந்துமதம் -2

அர்த்தமுள்ள இந்துமதம் -3

அர்த்தமுள்ள இந்துமதம் -4

அர்த்தமுள்ள இந்துமதம் -5

அர்த்தமுள்ள இந்துமதம்-6

அர்த்தமுள்ள இந்துமதம் -7

அர்த்தமுள்ள இந்துமதம் -8

அர்த்தமுள்ள இந்துமதம் -9

அர்த்தமுள்ள இந்துமதம் -10

கவிஞர் வைரமுத்துவின் "மூன்றாம் உலகப்போர்"


வைரமுத்து படைத்த மூன்றாம் உலகப்போர்  மிக நல்ல படைப்பு. படிப்பவர்கள் தலையில் மூளையும், நெஞ்சில் ஈரமும் இருந்தால் அவர்களின் எண்ணத்தில் ஒரு சிறு அதிர்வாவது தோன்றும்.

Download

கவிஞர் வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசம்"

கள்ளிக்காட்டு இதிகாசம்' கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்பாகும். ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து பெரும் வரவேற்ப்பையும், பாராட்டையும் பெற்றது, 2003  ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. இந்நூலில் வரும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அற்புதம். Download செய்ய கீழே உள்ள download link ல் clickசெய்யவும்.





Download Part 1
Download Part 2
Download Part 3

செவ்வாய், 17 ஜனவரி, 2012

ஒரு Domain Name ஐ பெற்றுக் கொள்வது எப்படி?

நீங்கள் ஒரு இணையத்தளத்தை உருவமைக்க முதல், உங்களது தளத்திற்கு ஒரு Domain Name ஐ தேர்ந்து எடுத்துக் கொள்ளுதல் அவசியமானதாகும். உங்களது தளத்தின் முகவரியை இலகுவான பெயரிற்கு மாற்றுவது இந்த Domain Name தான். ஏனெனில் இணையத்தளத்தின் முகவரி IP Address இலேயே அமைகிறது. Domain Name ஆனது  IP Address இலும் பார்க்க இலகுவாக நினைவு படுத்தக் கூடியதாகும். இதனால் பயனாளிகள் தளத்தின் முகவரி  IP Address இல் இருப்பதைவிட Domain Name இல் இருப்பதையே விரும்புகிறார்கள்.

Domain Name என்றால் என்ன?
Domain Name என்பது உங்களது இணைய தளத்தின் இலகுவான(friendly) முகவரியாகும். உதாரணமாக "blogspot.com" இனைச் சொல்லலாம். Domain Name ஆனது எல்லோரும் பதியக் கூடியவகையிலே அமைந்துள்ளது. இதை பதிந்து தர பல பதினர்கள்(Registrars) உள்ளனர். பல இணையத் தளங்களும் உள்ளன. உதாரணம் www.godaddy.com. இதற்கான விலைகள் தளத்திற்கு தளம் மாறுபடும். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் top-level domain name இலேயே தங்கியுள்ளது. சில top-level domain names இதோ  .com, .net, .org etc.

நீங்கள் ஒரு தனிப்பட்ட domain name இனைப் பதிந்ததும், உங்களது தளம் எங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை Registrar இற்கு தெரியப்படுத்த வேண்டும். முக்கியமாக DNS(Domain Name Service) informations. பயனாளிகள் தரும் Domain Name இனை IP Address ஆக மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவது DNS Server ஆகும். மிகவும் பொதுவான hostname "www" ஆகும். இந்த www தான் இணைய பக்கத்தின் பெயராக அமைகிறது.

இந்த Domain Name உங்களுக்கு சொந்தமானதா?
இல்லை. பதிவதற்கு நாம் கொடுக்கும் பணம் வாடகைதான். குறிப்பிட்ட காலத்தின் பின் நாங்கள் பணம் செலுத்தாவிடின் அடுத்தவர்கள் அதை தமக்கு பதியக் கூடியதாக மாறுகின்றது.

இலவச Domain Name பதியும் வசதிகள் உள்ளனவா?
ஆம். ஆனால் second-level domain மட்டுமே. உ+ம்- tamililit.blogspt.com.  இதில் tamililit என்பது second-level domain ஆகும். இதேபோல் co.cc இலும் இலவச Domain Namகளைப் பெற்றுக் கொள்ளலாம்.