Header

செவ்வாய், 25 டிசம்பர், 2012

Windows 7 இன் Problem Steps Recorder

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்த கூடிய இயங்குதளம் (OS) Windows இயங்குதளம் தான். அந்த நிறுவனமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான Windows 8-இன் பதிப்பை இப்பொழுது தான் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் Windows 7 பெரிய வரவேற்ப்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது.இந்த Windows 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. அதில் உள்ள ஒரு சிறப்பான வசதி இந்த Problem Steps Recorder ஆகும்.


இதன் மூலம் நாம் நம் கணினியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கம்ப்யூட்டர் சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ளலாம்.

இந்த மென்பொருள் ஒவ்வொரு திரையையும் பதித்து ( SCREEN SHOT ) வைக்கிறது அதுமட்டுமல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யையும் பதிந்து வைக்கிறது. இதன் மூலம் நீங்கள் எங்கே என்ன செய்திர்கள் என்பதை மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.

இதனை திறப்பதற்கு :

START மெனுவில் கிளிக் செய்து அதில் RUN-ஐ அழுத்துங்கள் அதில் PSR என தட்டச்சு  செய்யுங்கள் ( அல்லது ) START மெனுவில் உள்ள SEARCH என்பதில் PSR என தட்டாசு செய்யுங்கள்.





இதனை பயன்படுத்த : 

முதலில்அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். 

பின்னர் வரும் விண்டோவில் START RECORD என்ற buttonனை அழுத்துங்கள். 

பின்னர் எந்த மென்பொருள் செயல்படவில்லையோ அதனை திறந்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். 

நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட்டியினை அழுத்தும்போதும் இந்த மென்பொருள் ஸ்க்ரீன் SNAP SHOT எடுத்து வைக்கும். 

முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள். 

பின்னர் அது கோப்பை ( FILE ) எங்கு சேமிக்க வேண்டுமென்று கேட்கும் அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்துங்கள். 


அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பிகொள்ளுங்கள். இந்த மென்பொருள் உங்கள் ஸ்க்ரீன்கலை பதிந்து HTML கோப்பாக மாற்றிவைக்கும் அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப் பட்டிருக்கும்.


 
நான் இதை Practical Steps Record பண்ணுவதற்கும் பயன்படுத்துவதுண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக