பிரபல சமூக தளமான facebookகில் பலவிதமான photoகளை நாம் Upload செய்து மற்றவர்களுடன் பகிர்கிறோம். அந்த photoகளுக்கு எப்படி சுலபமாக Fun Effects கொடுப்பது என பார்க்கலாம். பொதுவாக photoகளுக்கு Fun Effects கொடுக்க நிறைய இணையதளங்கள் உள்ளன. ஆனால் அந்த தளங்களில் நேரடியாக facebookகில் உள்ள photoகளுக்கு Effects கொடுக்க முடியாது. மாறாக Fun Effects கொடுக்க முதலில் facebookகில் இருந்து photoவை download செய்து அந்த தளத்தில் upload செய்து disign பண்ணி முடித்தவுடன் மறுபடியும் அந்த தளத்தில் இருந்து photoவை download செய்து பிறகு facebookகில் upload செய்ய வேண்டும். நேரமும் அதிகமாக செலவாகிறது. ஆனால் இவ்வளவு வேலைகளையும் குறைத்து சுலபமாக photoகளுக்கு விதவிதமான Fun Effects கொடுப்பது எப்படி என இங்கு பார்ப்போம்.
முதலில் கீழே இந்த Mess My Photo linkகில் click செய்து இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளம் திறந்தவுடன் அதில் உள்ள FB Select என்பதை கிளிக் செய்யவும்.
- முதல் தடவை என்பதால் facebook permission கேட்கும். அதற்கு முதலில் வரும் windowவில் Install என்றும் அடுத்து வரும் windowவில் Allow என்பதையும் கொடுக்கவும்.
- அடுத்த windowவில் உங்களின் facebook கணக்கில் உள்ள photoகள் வரும். அதில் effect கொடுக்க விரும்பும் photoவை தேர்வு செய்து கொள்ளவும்.
- நீங்கள் தேர்வு செய்த photoவில் உங்களுக்கு விருப்பமான effect கொடுத்து அழகாக மாற்றி கொள்ளவும்.
- இதில் சுமார் 10 விதமான effect உள்ளது. உங்களுக்கு விரும்பிய effect கொடுத்து மாற்றியவுடன் Apply கொடுத்து FB SAVE என்ற லிங்கை அழுத்தியவுடன் இந்த புதிய photo உங்கள் facebook கணக்கில் சேமிக்கப்படும்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக