Header

திங்கள், 12 செப்டம்பர், 2011

TeraCopy - இலகுவாகவும், விரைவாகவும் File களை நகர்த்த(move) / நகலெடுக்க(copy) உதவும் மென்பொருள்

TeraCopy வேறு ஒரு இடத்தில் இருந்து Fileகளை நகர்த்த,  நகலெடுக்க 2007 ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஒரு மிகப் பழைய பயன்பாடு(application). பொதுவாக, ஒரு பயனர் Fileகளை நகர்த்த / நகலெடுக்க (PC to portable devices or Device to PC) கணிசமான நேரம் எடுக்கின்றது.  ஆனால், நடைமுறையில் ஒரு சீரற்ற move / copy இற்கான  நேரத்தை விட TeraCopy விரைவாக செய்கிறது.
 

TeraCopy தேடும் நேரத்தை  குறைக்க dynamic buffers களைப் பயன்படுத்துகிறது. இது செயன்முறையை இடைநிறுத்தி(pause), மீட்கும்(resume) வசதியை கொண்டுள்ளது. மேலும் இதை பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு File ஐ Copy / Move பண்ண மறுத்தால் அதை skip பண்ணி மற்ற Fileகளை Copy / Move செய்ய முடியும்.இந்த மென்பொருள் இப்போது முழுமையாக Unicode ஐ  support பண்ணுகிறது.

மேலும் இது கொண்டிருக்கும் வசதிகள்:
  • விரைவான Copy/Move
  •  இடைநிறுத்தி(pause), மீட்கும்(resume) வசதி
  • பிழை  மீட்பு (Error Recovery)
  • கவர்ச்சிகரமான File list
  • Shell ஒருங்கிணைப்பு
  • முழு யுனிகோட் ஆதரவு
  • விண்டோஸ் 7 x64 ஆதரவு
  • Portable TeraCopyயும் உண்டு .
தரவிறக்க முகவரி Download/Buy
விக்கியில் TeraCopy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக