Header

புதன், 14 செப்டம்பர், 2011

Microsoft Oulook இற்கான இலவச மாற்றீடுகள்

Microsoft Outlook இது உலகெங்கிலும் உள்ள மக்கள், மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக பிரபலமான Email Client ஆக உள்ளது. இது Microsoft Office தொகுப்புடன் இணைக்கப்பட்டு வருகின்றது. இதன் பயனாளர் பலர் எந்த மாற்று மென்பொருளையும் பாவிக்காமல் இதையே பாவித்து வருகின்றனர். ஆனால் இதனுடன் கடுமையான போட்டியை கொடுக்கும் சில மாற்று இலவச மென்பொருட்களும் இருக்கின்றன.

அந்த வகையில் முதல் 3 இடங்களையும் பிடித்த மென்பொருட்கள் இதோ!! 

Zimbra Desktop

 

Zimbra Desktop ஆனது எல்லாவற்றையும் Cloudஇல் Sync பண்ணும் அதே நேரம் எளிதான பயனர் இடைமுகத்தினால் (Interface) எமது கணணியையும் இணைக்கிறது. நீங்கள் உங்கள் நாள்காட்டி, தொடர்புகள், மின்னஞ்சல், Fileகள் மற்றும் ஆவணங்கள்  என்பவற்றை ஒத்திசைக்க(sync) முடியும்.

இது Gmail, Yahoo, Hotmail மற்றும் Facebook, Twitter, digg போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களிற்கும் Support தருகிறது. Zimbra ஐ நீங்கள் Onlineஇலும், Offline இலும்உபயோகிக்க முடியும்.

ஒரு ஒற்றை இடைமுகத்துடன் நீங்கள் உங்கள் மின்னஞ்சல், காலண்டர், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்ககளை இணைக்க முடியும்.

பதிவிறக்க இடம்.

 Mozilla Thunderbird



நீங்கள் MS Outlook பயன்படுத்துவது போன்றே உங்கள் இயல்புநிலை (Default) Email Client ஆக Mozilla Thunderbird ஐ உபயோகிக்க முடியும். நீங்கள் ஏற்கனவே Outlook பயன்படுத்தி வருகிறவர் என்றால், நீங்கள் வெறுமனே சிலபடிகளில் outlookஇல் இருந்து Thunderbirdக்கு ஏற்றுமதி செய்ய முடியும். Firefox போலவே இதுவும் ஒரு Open Source. அதனால் ஒரு சிறிய Firefox extension ஐ பாவித்து, Outlook PST file ஐ Thunderbirdக்கு மாற்ற முடியும்.

பதிவிறக்க இடம்.

 
ஒரே windowஇல்  அனைத்து தள மின்னஞ்சல்களை பாவிக்க Thunderbird ஐ உபயோகிக்கலாம்.

eM Client
 eMClient Win7, Vista மற்றும் XP களில் இயங்குகிறது. உங்கள் மின்னஞ்சல்களை, நாள்காட்டிகள் மற்றும் தொடர்புகளை ஒருங்கிணைக்க, பல்வேறு சேவையகங்கள்(Servers) மற்றும் சேவைகளை(Services) உபயோகிக்கின்றது. நீங்கள் முழு eMClient அம்சங்களை பார்க்க இங்கே செல்லவும்.

பதிவிறக்க CNet.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக