Windows 8 preview இப்போது வெளி வந்து விட்டது.
Windows 8 preview என்பது Windows 8 இற்கான Pre-beta version (beta இற்கு முந்திய version) ஆகும். இதில் உள்ளடங்கியிருக்கும் Pre-release மென்பொருட்கள் முன்னறிவித்தல் இன்றி மாற்றப்படலாம். இதை ஒரு பரிட்சாத்தமாக மட்டும் பாவிக்க முடியும். இதனால் வரும்விளைவுகளுக்கு Microsoft பொறுப்பாளி அல்ல.
மேலதிக தகவல்களுக்கும், தரவிறக்கத்திற்கும் http://msdn.microsoft.com/en-us/windows/apps/br229516.
தமிழில் தகவல் தொழிநுட்பம்
பயனுள்ள தகவல் தொழிநுட்ப தகவல்களை தமிழில் திரட்டித் தரும் வலைப்பூ
Header
வியாழன், 15 செப்டம்பர், 2011
புதன், 14 செப்டம்பர், 2011
Microsoft Oulook இற்கான இலவச மாற்றீடுகள்
Microsoft Outlook இது
உலகெங்கிலும் உள்ள மக்கள், மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக பிரபலமான
Email Client ஆக உள்ளது. இது Microsoft Office தொகுப்புடன்
இணைக்கப்பட்டு வருகின்றது. இதன் பயனாளர் பலர் எந்த மாற்று மென்பொருளையும்
பாவிக்காமல் இதையே பாவித்து வருகின்றனர். ஆனால் இதனுடன் கடுமையான
போட்டியை கொடுக்கும் சில மாற்று இலவச மென்பொருட்களும் இருக்கின்றன.
அந்த வகையில் முதல் 3 இடங்களையும் பிடித்த மென்பொருட்கள் இதோ!!
Zimbra Desktop
Zimbra Desktop ஆனது எல்லாவற்றையும் Cloudஇல் Sync பண்ணும் அதே நேரம் எளிதான பயனர் இடைமுகத்தினால் (Interface) எமது கணணியையும் இணைக்கிறது. நீங்கள் உங்கள் நாள்காட்டி, தொடர்புகள், மின்னஞ்சல், Fileகள் மற்றும் ஆவணங்கள் என்பவற்றை ஒத்திசைக்க(sync) முடியும்.
இது Gmail, Yahoo, Hotmail மற்றும் Facebook, Twitter, digg போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களிற்கும் Support தருகிறது. Zimbra ஐ நீங்கள் Onlineஇலும், Offline இலும்உபயோகிக்க முடியும்.
ஒரு ஒற்றை இடைமுகத்துடன் நீங்கள் உங்கள் மின்னஞ்சல், காலண்டர், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்ககளை இணைக்க முடியும்.பதிவிறக்க இடம்.
Mozilla Thunderbird
நீங்கள் MS Outlook பயன்படுத்துவது போன்றே உங்கள் இயல்புநிலை (Default) Email Client ஆக Mozilla Thunderbird ஐ உபயோகிக்க முடியும். நீங்கள் ஏற்கனவே Outlook பயன்படுத்தி வருகிறவர் என்றால், நீங்கள் வெறுமனே சிலபடிகளில் outlookஇல் இருந்து Thunderbirdக்கு ஏற்றுமதி செய்ய முடியும். Firefox போலவே இதுவும் ஒரு Open Source. அதனால் ஒரு சிறிய Firefox extension ஐ பாவித்து, Outlook PST file ஐ Thunderbirdக்கு மாற்ற முடியும்.
பதிவிறக்க இடம்.
ஒரே windowஇல் அனைத்து தள மின்னஞ்சல்களை பாவிக்க Thunderbird ஐ உபயோகிக்கலாம்.
eM Client
eMClient Win7, Vista மற்றும் XP களில் இயங்குகிறது. உங்கள் மின்னஞ்சல்களை, நாள்காட்டிகள் மற்றும் தொடர்புகளை ஒருங்கிணைக்க, பல்வேறு சேவையகங்கள்(Servers) மற்றும் சேவைகளை(Services) உபயோகிக்கின்றது. நீங்கள் முழு eMClient அம்சங்களை பார்க்க இங்கே செல்லவும்.
பதிவிறக்க CNet.
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
பழுதான ZIP Fileகளை திருத்துவது எப்படி?
பொதுவாக நீங்கள் நம்பகமற்ற இணைய தளங்களில் இருந்து Zip Files பதிவிறக்கி விரிவாக்கும்போது , "The zip file has corrupted or some file is missing" பிழைச்செய்தியை(Broken Message) தருகின்றது. எப்படி அதை சரி செய்யலாம்? சேதமடைந்த Fileகளை மீட்பது எப்படி? சேதமடைந்த Zip Fileகளை சரிசெய்ய Zip2Fix என்று ஒரு எளிமையான application உள்ளது.
Zip2Fix, சேதமடைந்த Zip Fileகளில் உள்ள சேதமடையாத Fileகளை பிரித்தெடுக்க பயன்படும் இலவச Portable மென்பொருளாகும். இது ZIP மற்றும் SFX Fileகளை மட்டுமே ஆதரிக்கிறது.
இது சேதமடைந்த Fileகளுக்கு ஒரு சிறந்த தீர்வு வழங்கும் எளிமையான சிறிய இலவச மென்பொருளாக உள்ளது. இது வேறு எதையும் செய்வதில்லை.
தரவிறக்க முகவரி: CNet
Zip2Fix, சேதமடைந்த Zip Fileகளில் உள்ள சேதமடையாத Fileகளை பிரித்தெடுக்க பயன்படும் இலவச Portable மென்பொருளாகும். இது ZIP மற்றும் SFX Fileகளை மட்டுமே ஆதரிக்கிறது.
இது சேதமடைந்த Fileகளுக்கு ஒரு சிறந்த தீர்வு வழங்கும் எளிமையான சிறிய இலவச மென்பொருளாக உள்ளது. இது வேறு எதையும் செய்வதில்லை.
தரவிறக்க முகவரி: CNet
லேபிள்கள்:
இலவச மென்பொருள்,
விண்டோஸ்
இருப்பிடம்:
Schofield Pl, Colombo 00300, Sri Lanka
திங்கள், 12 செப்டம்பர், 2011
TeraCopy - இலகுவாகவும், விரைவாகவும் File களை நகர்த்த(move) / நகலெடுக்க(copy) உதவும் மென்பொருள்
TeraCopy வேறு ஒரு இடத்தில் இருந்து Fileகளை நகர்த்த, நகலெடுக்க 2007 ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஒரு மிகப் பழைய பயன்பாடு(application). பொதுவாக, ஒரு பயனர் Fileகளை நகர்த்த / நகலெடுக்க (PC to portable devices or Device to PC) கணிசமான நேரம் எடுக்கின்றது. ஆனால், நடைமுறையில் ஒரு சீரற்ற move / copy இற்கான நேரத்தை விட TeraCopy விரைவாக செய்கிறது.
TeraCopy தேடும் நேரத்தை குறைக்க dynamic buffers களைப் பயன்படுத்துகிறது. இது செயன்முறையை இடைநிறுத்தி(pause), மீட்கும்(resume) வசதியை கொண்டுள்ளது. மேலும் இதை பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு File ஐ Copy / Move பண்ண மறுத்தால் அதை skip பண்ணி மற்ற Fileகளை Copy / Move செய்ய முடியும்.இந்த மென்பொருள் இப்போது முழுமையாக Unicode ஐ support பண்ணுகிறது.
மேலும் இது கொண்டிருக்கும் வசதிகள்:
விக்கியில் TeraCopy
TeraCopy தேடும் நேரத்தை குறைக்க dynamic buffers களைப் பயன்படுத்துகிறது. இது செயன்முறையை இடைநிறுத்தி(pause), மீட்கும்(resume) வசதியை கொண்டுள்ளது. மேலும் இதை பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு File ஐ Copy / Move பண்ண மறுத்தால் அதை skip பண்ணி மற்ற Fileகளை Copy / Move செய்ய முடியும்.இந்த மென்பொருள் இப்போது முழுமையாக Unicode ஐ support பண்ணுகிறது.
மேலும் இது கொண்டிருக்கும் வசதிகள்:
- விரைவான Copy/Move
- இடைநிறுத்தி(pause), மீட்கும்(resume) வசதி
- பிழை மீட்பு (Error Recovery)
- கவர்ச்சிகரமான File list
- Shell ஒருங்கிணைப்பு
- முழு யுனிகோட் ஆதரவு
- விண்டோஸ் 7 x64 ஆதரவு
- Portable TeraCopyயும் உண்டு .
விக்கியில் TeraCopy
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)