இணையத்தில் நாளுக்கு நாள் பல்வேறு தளங்கள் உருவாகி வருகின்றது, விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா, வரலாறுகள், கட்டுரைகள் என பல பிரிவுகளில் அடுக்கிக்கொண்டே செல்லலாம். அந்தவகையில் சில தளங்கள் சிறுவர்களை நோக்காகக்கொண்டு உருவாக்கப்படுகின்றது. இவைகள் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பல வகையிலும் உதவுகின்றமை பாராட்டத்தக்க விடயமே.
அந்த வகையில் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் சில தளங்களை +தமிழில் IT உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
Aplusclick
இது சிறுவர்களின் கணித மற்றும் தர்க ரீதியான திறனை விருத்தி செய்வதற்காக Arithmetic, Algebra, Geometry, Analysis, Logic, Applied, Exit Exam, Everyday,
Olympiad, Funny , Sport Math , iPad eBooks எனும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாட வகைகளை கொண்டுள்ளது. மேலும் தரம் 1 தொடக்கம் தரம் 12 வரையான குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு ஏற்ற பாட வகைகளை கொண்டுள்ளதுடன் சிறுவர்களின் ஆங்கில அறிவு விருத்திக்கும் இது பெரிதும் உதவுகின்றது.
Funbrain
இந்த தளமும் சிறுவர்களின் அறிவு விருத்திக்காக பல சுவாரஷ்யமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் சிறுவர்களின் அறிவு, திறன் விருத்திக்கான அருமையான விளையாட்டுக்களை கொண்டு இந்த தளம் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Smartygames
இது முற்றிலும் பல நுட்பமான விளையாட்டுக்களை கொண்டிருக்கின்றது. சிறார்களின் கல்வி விருத்திக்கு ஏற்ற வகையில் Math, Money, Time, Reading, Counting, Sudoku , Memory, Puzzles, எனும் பிரிவுகளின் கீழ் சுவையான பல விளையாட்டுக்களை வழங்குவதுடன், Did you know? என்பதன் மூலம் நாம் அறிந்திராத பல விடயங்களை அறியத்தருகின்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக