Header

வியாழன், 1 நவம்பர், 2012

தமிழில் programming கற்றுக்கொள்ள ஒரு வலைப்பூ

தமிழில் programming ஆ? இந்த தகவல் கற்கண்டு போல இனிக்கிறதா? ஆம். வலைப்பூவின் பெயரும் அதுதான்.

கற்கண்டு

"வலைப் பூ (Blog) என்றால் என்ன? எவ்வாறு பதிவது?" - தமிழில் அறிய

அதிகமான இளம் வயதினருக்கு blog இல் ஆர்வம் இருந்தாலும், அதை எவ்வாறு உருவாக்குவது என்பதை தெரியாமல் உள்ளனர். அவர்களுக்கு இந்த வலைப்பூவில், தமிழில் படிபடியாக விளக்கி உள்ளார்கள். அந்த link கள் ஒழுங்காக கீழே தரப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.


வலைப்பூ என்றால் என்ன?


வலைப் பூவில் உங்களுக்கான வலைப்பூ தொடங்குவது எப்படி?






கேட்ஜெட் (GADGETS) மற்றும் பிளாக்கர் லேஅவுட் (LAYOUT) பயன்படுத்துவது எப்படி?

Facebook Photo களுக்கு சுலபமாக விதவிதமான Effects கொடுக்க


பிரபல சமூக தளமான facebookகில் பலவிதமான photoகளை நாம் Upload செய்து மற்றவர்களுடன் பகிர்கிறோம். அந்த photoகளுக்கு எப்படி சுலபமாக Fun Effects கொடுப்பது என பார்க்கலாம். பொதுவாக photoகளுக்கு Fun Effects கொடுக்க நிறைய இணையதளங்கள் உள்ளன. ஆனால் அந்த தளங்களில் நேரடியாக facebookகில் உள்ள photoகளுக்கு Effects கொடுக்க முடியாது. மாறாக Fun Effects கொடுக்க முதலில் facebookகில் இருந்து photoவை download செய்து அந்த தளத்தில் upload செய்து disign பண்ணி முடித்தவுடன் மறுபடியும் அந்த தளத்தில் இருந்து  photoவை download செய்து பிறகு facebookகில் upload செய்ய வேண்டும். நேரமும் அதிகமாக செலவாகிறது. ஆனால் இவ்வளவு வேலைகளையும் குறைத்து சுலபமாக photoகளுக்கு விதவிதமான Fun Effects கொடுப்பது எப்படி என இங்கு பார்ப்போம்.


முதலில் கீழே இந்த Mess My Photo linkகில் click செய்து இந்த தளத்திற்கு செல்லவும். இந்த தளம் திறந்தவுடன் அதில் உள்ள FB Select என்பதை கிளிக் செய்யவும்.
  • முதல் தடவை என்பதால் facebook permission கேட்கும். அதற்கு முதலில் வரும் windowவில் Install என்றும் அடுத்து வரும் windowவில் Allow என்பதையும் கொடுக்கவும்.
  • அடுத்த windowவில் உங்களின் facebook கணக்கில் உள்ள photoகள் வரும். அதில் effect கொடுக்க விரும்பும் photoவை தேர்வு செய்து கொள்ளவும்.   
  •   நீங்கள் தேர்வு செய்த photoவில் உங்களுக்கு விருப்பமான effect கொடுத்து அழகாக மாற்றி கொள்ளவும்.



  • இதில் சுமார் 10 விதமான effect உள்ளது. உங்களுக்கு விரும்பிய effect கொடுத்து மாற்றியவுடன் Apply கொடுத்து FB SAVE என்ற லிங்கை அழுத்தியவுடன் இந்த புதிய photo உங்கள் facebook கணக்கில் சேமிக்கப்படும்

எளிமையாக ஆங்கிலத்தில் programming கற்றுக் கொள்ள வேண்டுமா?


இவை தவிர, Programming செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, Programming பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக, இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது. இதன் பெயர் கோட் அகடமி (Code Academy). Programme எழுதுவதனை coding எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் Account திறக்கும் முன்னர், Programming எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது. நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம், அப்படியேகொஞ்சம் கொஞ்சமாகநம்மை Programming என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது. அதன் பின்னரே, நம்மை தளத்தில் பதியச் சொல்லி கேட்கிறது. இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன. புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல் பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் Programming கற்றுக் கொள்ளலாம்.