நீங்கள் ஒரு இணையத்தளத்தை உருவமைக்க முதல், உங்களது தளத்திற்கு ஒரு Domain Name ஐ தேர்ந்து எடுத்துக் கொள்ளுதல் அவசியமானதாகும். உங்களது தளத்தின் முகவரியை இலகுவான பெயரிற்கு மாற்றுவது இந்த Domain Name தான். ஏனெனில் இணையத்தளத்தின் முகவரி IP Address இலேயே அமைகிறது. Domain Name ஆனது IP Address இலும் பார்க்க இலகுவாக நினைவு படுத்தக் கூடியதாகும். இதனால் பயனாளிகள் தளத்தின் முகவரி IP Address இல் இருப்பதைவிட Domain Name இல் இருப்பதையே விரும்புகிறார்கள்.
Domain Name என்றால் என்ன?
Domain Name என்பது உங்களது இணைய தளத்தின் இலகுவான(friendly) முகவரியாகும். உதாரணமாக "blogspot.com" இனைச் சொல்லலாம். Domain Name ஆனது எல்லோரும் பதியக் கூடியவகையிலே அமைந்துள்ளது. இதை பதிந்து தர பல பதினர்கள்(Registrars) உள்ளனர். பல இணையத் தளங்களும் உள்ளன. உதாரணம் www.godaddy.com. இதற்கான விலைகள் தளத்திற்கு தளம் மாறுபடும். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் top-level domain name இலேயே தங்கியுள்ளது. சில top-level domain names
இதோ .com, .net, .org etc.
நீங்கள் ஒரு தனிப்பட்ட domain name இனைப் பதிந்ததும், உங்களது தளம் எங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை Registrar இற்கு தெரியப்படுத்த வேண்டும். முக்கியமாக DNS(Domain Name Service) informations. பயனாளிகள் தரும் Domain Name இனை IP Address ஆக மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவது DNS Server ஆகும். மிகவும் பொதுவான hostname "www" ஆகும். இந்த www தான் இணைய பக்கத்தின் பெயராக அமைகிறது.
இந்த Domain Name உங்களுக்கு சொந்தமானதா?
இல்லை. பதிவதற்கு நாம் கொடுக்கும் பணம் வாடகைதான். குறிப்பிட்ட காலத்தின் பின் நாங்கள் பணம் செலுத்தாவிடின் அடுத்தவர்கள் அதை தமக்கு பதியக் கூடியதாக மாறுகின்றது.
இலவச Domain Name பதியும் வசதிகள் உள்ளனவா?
ஆம். ஆனால் second-level domain மட்டுமே. உ+ம்- tamililit.blogspt.com. இதில் tamililit என்பது second-level domain ஆகும். இதேபோல் co.cc இலும் இலவச Domain Namகளைப் பெற்றுக் கொள்ளலாம்.